முதுகில் அம்மிக்கல் வைத்து 508 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
ADDED :5223 days ago
பழநி : பழநி கோயிலில், சிங்கப்பூர் பக்தர், உலக நலனுக்காக முதுகில் அம்மிக்கல் வைத்து தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். சிங்கப்பூரை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சந்திரன், 38. நேற்று, பழநி பாதவிநாயகர் கோயில் முன், முதுகில் அம்மிக்கல்லை வைத்து 508 தேங்காய்கள் உடைத்து நேர்த்தி செலுத்தினார். அவர் கூறுகையில், ""சூரிய புயலால் 2012 ல், உலகம் அழியப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. உலக நலன் காக்கவும், உயிர்களை பேரழிவில் இருந்து மீட்கவும் பிரார்த்தனை மேற்கொண்டேன். தேங்காய்களை உடைக்கும்போது, இறை சிந்தனையுடன் இருந்ததால் வலி ஏற்படவில்லை, என்றார்.