கல்லிடைக்குறிச்சி கோயிலில் கொடை விழா கோலாகலம்
அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சி உச்சிமகாளியம்மன், சட்டநாதசுவாமி, வாழ உகந்த அம்பாள் கோயிலில் கொடை விழா நடந்தது. கல்லிடைக்குறிச்சி சைவ பிள்ளைமார், சைவ செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநாடு உகந்த விநாயகர் வகையறா உச்சினிமாகாளி அம்பாள் கோயில், சட்டநாத சுவாமி கோயில் மற்றும் வாழ உகந்த அம்பாள் கோயிலில் கொடை விழா நடந்தது. உச்சினிமாகாளி அம்பாள் கோயிலில் குடி அழைப்பு அலங்கார தீபாராதனை, மாக்காப்பு தீபாராதனை, பால்குடம், தீர்த்தம் எடுத்து வருதல், கொடை விழா அபிஷேக ஆராதனை, விளக்கு பூஜை, ஸ்ரீநாடு உகந்த விநாயகர் கோயிலில் இருந்து பூச்சட்டி வீதி உலா அலங்கார தீபாராதனை, கிரககுடம் வீதி உலா வருதல், படப்பு தீபாராதனை நடந்தது. சட்டநாதசுவாமி கோயிலில் தீர்த்தம், சங்கிலி எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக, தீபாராதனை, அலங்கார தீபாராதனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. வாழ உகந்த அம்பாள் கோயிலில் குடி அழைப்பு, தீபாராதனை, ஸ்ரீநாடு உகந்த விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அபிஷேக, தீபாராதனை, ஸ்ரீஉகந்த விநாயகர் கோயிலில் இருந்து பூச்சட்டி வீதி உலா, இரவு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை, அம்பாள் வீதி உலா நடந்தது.