கும்பாபிஷேக விழா பக்தர்கள் பரவசம்
பந்தலுார்: பந்தலுார் அருகே முக்கட்டி சோலாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பந்தலுார் அருகே முக்கட்டி சோலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக
விழா நடந்தது. 12ம் தேதி காலை,6:00மணிக்கு முகூர்த்தகால் நடுதல், கொடியேற்றுதல் மற்றும் கணபதி ஹோமம், கணபதி வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு கணபதி வழிபாடு, 6:00மணிக்கு ஆலயம் திறந்து வைத்தல், யாகசாலை பூஜை, இரவு, 9:00 மணிக்கு கலச விக்கிரகங்கள் பூஜை, மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. 14ம் தேதி காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகாதீபாரதனை மற்றும் தீர்த்தம் பிரசாதம்
வழங்குதல், 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை குருக்கள் கனநாதன்
தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவுக்கு ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர்
கேசவன், செயலாளர் நாதன், பொருளாளர் நாராயணசாமி, ஆலோசகர் சிங்கராஜ், நிர்வாகிகள் ரவி, ராஜேந்திரன், திவேல் மற்றும் கமிட்டியினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.