உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டம் திருவிழா நாளை பூச்சாட்டுடன் துவக்கம்

குண்டம் திருவிழா நாளை பூச்சாட்டுடன் துவக்கம்

ஈரோடு: கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா, நாளை (16ம் தேதி)
தொடங்குகிறது. ஈரோடு காவிரியின் தென்திசையில் எழுந்தருளியுள்ள கள்ளுக்கடை மேடு
கொண்டத்து பத்ர காளியம்மன் கோவில், தீ மிதி திருவிழா, நாளை (16ம் தேதி) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அன்று காலை காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, 9, மணிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து, 22ம் தேதி, இரவு கொடியேற்றம், 28ம் தேதி காலை பாலபிஷேகம், 29ம் தேதி இரவு, அக்னி கவாளம் நடக்கிறது. மார்ச், 1ம் தேதி, மாலை, 6 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்படுகிறது. 2ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து பொங்கல் வைபவம், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மறு பூஜையுடன், 3ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !