ஜெலவீரபத்ர கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3682 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஜெலவீரபத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை தாலுகா, குந்துகோட்டை அருகே ஜெலவீரபத்ர சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி அதிகாலை, 4.35
மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, ஜெலவீரபத்ர சுவாமிக்கு அபிஷேகம் மற்றும்
ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 10 மணிக்கு, பொதுமக்கள் முன்னிலையில், ஜெலவீரபத்ர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கணபதி, நாகலிங்ககேஸ்வர ஸ்வாமி, பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, செண்டிகேஸ்வர சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.