உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்: மாசி சிறப்பு பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்: மாசி சிறப்பு பூஜை

நாமக்கல்: மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு
சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு விசேஷ தினத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நேற்று, மாசி
முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு
மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !