உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை: பிப்., 17ல் கோலாகல துவக்கம்

லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை: பிப்., 17ல் கோலாகல துவக்கம்

மோகனூர்: மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, லட்சார்ச்சனை விழா, வரும், 17ம் தேதி துவங்குகிறது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில்
உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மாணவ, மாணவியர் சகலவித கல்விகளிலும்
வெற்றியடையவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தே பொழிந்து நதிநீர் வளம் பெற்று விவசாயம் மேன்மை அடையவும், உலக நன்மைக்காகவும், லட்சுமி ஹயக்ரீவருக்கு, லட்சார்ச்சனை விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, வரும், 17ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது.

இதை முன்னிட்டு, வரும், 17ம் தேதி, காலை, 6 மணிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. மறுநாள்
முதல், 20ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு அபி?ஷக ஆராதனைகள் நடக்கிறது. 21ம் தேதி,
காலை, 7 மணிக்கு, ஹோம சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், ஹயக்ரீவருக்கு சிறப்பு
திருமஞ்சனம், லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. அன்று மாலை, 6 மணிக்கு, ஹயக்ரீவர்
உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !