புவனகிரி செல்வ மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :5223 days ago
புவனகிரி : புவனகிரி செல்வ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கீழ்புவனகிரி தாமரைக்குளம் கீழ்கரையில் அமைந்துள்ள செல்வ மாரியம்மன் கோவில் 8ம் ஆண்டு திருவிழா கடந்த 10ந் தேதி துவங்கியது. சக்தி கரகத்துடன் காவடி எடுத்தல் மற்றும் சாகை விழாவும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. 14ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. கீழ்புவனகிரி தாமரைக்குளத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் பூஜையில் பங்கேற்றனர்.