உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூரில் மாசி மக பூஜை

திருவொற்றியூரில் மாசி மக பூஜை

சென்னை: சென்னை, திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள நகரத்தார் விடுதியில், மாசி மக பூஜை இன்று துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. மாசிமக பூஜைக்காக, சென்னை மண்ணடி, பவளக்காரத் தெருவில் உள்ள, புது தெண்டாயுதபாணி கோவில் வீட்டில் இருந்தும், பழைய தெண்டாயுத பாணி கோவில் வீட்டில் இருந்தும், இன்று காலை 9:00 மணிக்கு, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள், வெள்ளி ரதம் மற்றும் மரத்தேரில் திருவொற்றியூருக்கு எழுந்தருள்கின்றனர். பிப்., 19, 20ம் தேதிகளில் மகேஸ்வர பூஜை, 21ம்தேதி பெரிய பூஜை (மகிழடி சேவை) 22ம் தேதி பூஜை முடித்து, மாலை 3:00 மணிக்கு, திருவொற்றியூரில் இருந்து, சென்னை பவளக்காரத் தெருவில் உள்ள தெண்டாயுதபாணி சுவாமி கோவில் வீடுகளுக்கு எழுந்தருள்கின்றனர். மாசி மக பூஜையை முன்னிட்டு, பவளக்காரத் தெருவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவொற்றியூருக்கு இன்று பாத யாத்திரை செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !