அழகுநாச்சியம்மன் கோயில் மராமத்து பணிகள் தாமதம்
ADDED :5222 days ago
பெரியகுளம்:பெரியகுளம் அழகுநாச்சியம்மன் கோயில் நுழைவுப்பாதை மேற்கூரை மற்றும் கட்டடம் இடிந்து விழும்நிலையில் உள்ளது.பெரியகுளம் அழகுநாச்சியம்மன் கோயில் இந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயிலாகும். பாலசுப்பிரமணியர் கோயில் செல்லும் நுழைவு பாதையில் உள்ளது. வாரம்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல மாதங்களுக்கு முன்பு கோயில் நுழைவுபாதை செல்லும் மேற்கூரை கீழே விழுந்தது. தற்போது மேற்கூரை உட்பட கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. பக்தர்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது பயத்துடன் செல்கின்றனர். இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வரவேண்டும்.