உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் சனிப்பிரதோஷ விழா

வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் சனிப்பிரதோஷ விழா

வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ விழா நடந்தது.
இக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு, சனிப்பிரதோஷத்தை யொட்டி பிப்.,21 முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜைகள் நடந்தன.  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். இதில், நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !