உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மாசி பெரும் திருவிழாவில் பிப்.,21 தேரோட்டம் நடந்தது.இந்த விழா கடந்த 13-ம் தேதி காலையில்
கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினம் காலை, மாலை சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

எல்லா நாட்களிலும் மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் நினைவு கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை எட்டு மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொணடனர். இரவு ஒன்பது மணிக்கு தேரடி திடலில் சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தவர்ண நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பத்தாம் நாள் விழாவில் மாலை நான்கு மணிக்கு ஆராட்டுத்துறைக்கு சுவாமியும், அம்பாளும் எழுந்தருளும் நிகழ்ச்சியும், நள்ளிரவில் கோயிலுக்கு திரும்பி எழுந்தருளலும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !