உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்கத்தில் சூரியஒளி தெரியாமல் ஏமாற்றம்

லிங்கத்தில் சூரியஒளி தெரியாமல் ஏமாற்றம்

தாரமங்கலம்: தமிழகத்தில், மேற்கு பார்த்த நுழைவாயில் உள்ள ஒரே சிவன் கோவில்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில். இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில், மூன்று நாட்கள் சூரியஒளி சிவலிங்கத்தின் மீது படும். நேற்று சிவலிங்கத்தின் மீது சூரியஒளி படும் என, மாலை, 3 மணியிலிருந்தே ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை, 6.15 மணிக்கு, சுவாமி மீது சூரிய ஒளி தெரிகிறதா என்பதை காண பக்தர்கள் முட்டி மோதி சென்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சூரியஒளி சிவலிங்கத்தின் மீது படுவது மறைக்கப்பட்டு தடைபட்டது. ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !