உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபத்ரகாளியம்மன் மாசி திருவிழா

வடபத்ரகாளியம்மன் மாசி திருவிழா

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, வடபத்ரகாளியம்மன் மாசி திருவிழா, இன்று தொடங்கி
நான்கு நாட்கள் நடக்கிறது. இடங்கணசாலை கிராமம் மெய்யனூரில் உள்ளது வடபத்ரகாளியம்மன் கோவில். இங்கு, மாசி திருவிழா இன்று காலை, 10 மணிக்கு, அபிஷேகம், சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் திருவீதி உலாவுடன் கரகாட்டம், மயிலாட்டம் நடக்கிறது. சக்தி கரகம் எடுத்தல், பூமிதித்தல், உருளுதண்டம், கூழ்படைத்தல், அன்னதானம், கயிறு இழுக்கும் போட்டி, மஞ்சள் நீராட்டம் என, விழா தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !