உளுந்தூர்பேட்டை பிரதோஷத்தையொட்டி 108 கலசாபிஷேக பூஜை
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில்
பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தது.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சி, உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீலோகாம்பிகை உடனுறை
மாஷாபுரீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நந்தி பெருமாளுக்கு, 108
கலசாபிஷேகம், பூஜைகளும் நடந்தது. பின் மாஷபுரீஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளை துரைசாமி குருக்கள் செய்திருந்தார். எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவில், உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவில், ஆதனூர் அருணாசலேஸ்வரர் கோவில், சேந்தமங்கலம் பிரகதீஸ்வர அம்பிகா சமேத ஆபாத் சகாய ஈஸ்வரர் கோவில், திருநாவலூர் மனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில்களில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிரதோஷத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிப்பட்டனர்.