கீழக்கரை அருகே தட்டார் மடத்தில் விநாயகர், சுப்ரமணிய சுவாமி தேர் பவனி
ADDED :1 hours ago
கீழக்கரை: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி தேர் பவனி நடந்தது. உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு மேளதாளங்கள் முழங்க 3 கி.மீ., தொலைவில் உள்ள தில்லையேந்தல் தட்டார் மடம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.