உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் 100 மூத்த தம்பதியர் கவுரவிப்பு: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி

காஞ்சியில் 100 மூத்த தம்பதியர் கவுரவிப்பு: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி

காஞ்சிபுரம்: உலக நன்மைக்காக, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த, 80 வயதிற்கு மேற்பட்ட 100 மூத்த தம்பதியரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஆசி வழங்கினார்.


சொர்ண தம்பதி திருமண ஏற்பாட்டு குழு சார்பில், திருமணமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்த தம்பதியர், 80 வயது பூர்த்தியடைந்த 100 மூத்த தம்பதியரை கவுரவிக்கும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சத்திரத்தில் நேற்று நடந்தது. இதில், உலக நன்மைக்காகவும், தம்பதியர்கள் நோயில்லாமல் நீடுழி வாழ்ந்து பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மூத்த தம்பதியர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர்மாலை அணிவித்தும் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !