தங்கவயல் பகவதி அம்மனுக்கு பொங்கலிடும் விழா
ADDED :3674 days ago
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை விவேக் நகர், அய்யப்ப சுவாமி கோவிலில், பகவதி அம்மனுக்கு பொங்கலிடும் விழா, பிப்.,22 நடந்தது.கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், விழா நடக்கவுள்ளது. இதன் அங்கமாக, தங்கவயலில் மூன்று ஆண்டுகளாக
அய்யப்ப சுவாமி கோவிலில் பகவதி அம்மனுக்கு பொங்கலிடும் வைபவம் நடந்து வருகிறது.
பிப்.,22ல் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள், பொங்கலிட்டு வழிபட்டனர்.விழாவில் பகவதி
சேத்திரம் சந்திரசேகர சுவாமி உட்பட, பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சமிதியினர் செய்திருந்தனர்.