வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்
ADDED :3670 days ago
கரூர்: பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 12ம் தேதி வெள்ளி கருட சேவையுடன் விழா துவங்கியது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி உற்வச விழா நடக்கிறது. கடந்த, 14ம் தேதி கோவிலில் கொடியேற்ற விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நேற்று காலை, 9 மணிக்கு துவங்கியது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பிறகு, வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபராதனை நடந்தது. தொடர்ந்து, நாளை மாலை, 6.30 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 25ம் தேதி, 27ம் தேதிகளில் கருடசேவையும், 29ம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.