முனியாண்டி கோயிலில் வினோதம் : 117 கிடா, 236 சேவல் பலியிட்டு நேர்த்திகடன்!
ADDED :3661 days ago
விருதுநகர்: விருதுநகர் அருகே வள்ளியூர் முனியாண்டி சுவாமி கோயிலில் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 117 கிடா, 236 சேவல்கள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்களால் பொங்கலிட்டு, சுற்று கிராமத்தினருக்கு அன்னதானம் வழங்கப்படும். நேற்று முன் தினம் நடந்த பவுர்ணமியையொட்டி சுற்று கிராம பக்தர்கள் சுவாமிக்கு 117 கிடாக்கள், 236 சேவல்களை நேர்த்திக்கடன் செலுத்தி பலியிட்டனர். இதையடுத்து 2, 300 கிலோ அரிசியுடன் நேர்த்திகடன் கறியுடன் பிரியாணி செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.