செவ்வாய் தோஷம் நீங்கும்!
ADDED :5262 days ago
முருகப் பெருமானுக்குரிய தலங்களான வைத்தீஸ்வரன் கோயிலும், பழநியும் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த வழிபாட்டுத் தலங்களாகவும் திகழ்கின்றன. வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார ஸ்வாமியையும், பழநி தண்டாயுதபாணியையும் வழிபட்டு வர, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தடைகள் அகன்று, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மயிலாடுதுறை அருகே உள்ள சிறுகுடி மங்களநாதர் ஆலயத்தில், செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு வந்தாலும் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.