காரிய சித்தி கணபதி கோவிலில் சங்கட நிவாரண ஹோமம்
ADDED :3720 days ago
திருவள்ளூர்: காரிய சித்தி கணபதி கோவிலில், நாளை, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில் உள்ளது காரிய சித்தி கணபதி ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில்.இக்கோவிலில், மாசி மாத சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, காரிய சித்தி கணபதிக்கு நடைபெறும் சங்கட நிவாரண ஹோமத்தில், 108 திரவியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின், 11 வகை பழங்களால் விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். மேலும், ககார ஸகஸ்ரநாம அர்ச்சனை காலை 9:00 மணிக்கு துவங்கி மதியம் 3:00 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெறும்.