ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் சீரமைப்பு
ADDED :3667 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் அடித்தளம் சீரமைக்கும் பணி நடந்தது. சீதாதேவியை ராவணன் சிறைபிடித்து சென்றதும் அவரை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணியில் வானர சேனைகள் ஈடுபட்டன. இதனை ராமர், லெட்சுமணர், ராமேஸ்வரத்தில் உயரமான மணல் திட்டையில் (கெந்தமாதன பர்வதம்) நின்று பார்வையிட்டதாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. அந்த இடத்தில் ராமர் பாதம் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் அடித்தளம் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து இருந்தது. இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் பார்வையிட்டனர்.