உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் குரு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர் குரு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர்: குரு கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள, சாயிபாபா சன்னிதியில் காலை 9:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்திக்கு மாலை, 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதே போல், மணவாள நகர், மங்களீஸ்வரர் கோவில், தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், தீப உற்சவம் நடந்தது. திருவள்ளூர், ஓம் ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், ஆரத்தியும், மாலையில் ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !