உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் அம்பிகை மாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு சித்திரை திருவிழா

காட்டூர் அம்பிகை மாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு சித்திரை திருவிழா

கோவை: கோவை காட்டூர் காளப்பன் லே அவுட்டில் உள்ள ஸ்ரீ அம்பிகை மாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவம் இன்று நடந்தது. கடந்த ஏப். 28 ம் தேதி கம்பம் சாட்டுதலுடன் துவங்கிய சித்திரை திருவிழாவில் அம்மன் ஒவ்வொரு நாளும் பண்ணாரி அம்மன், துர்க்கை, சமயபுரம் மாரியம்மன், சாமுண்டீஸ்வரி, காசி விசாலாட்சி என விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து திருவிளக்கு பூஜை மற்றும் கூட்டு வழிபாடு, கோ பூஜை செய்யப்பட்டு இரவு மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதில் அப்பகுதியில் இருந்த ஏராளமான பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நாளை கரகம் திருவீதி உலா வந்து மஞ்சள் நீராட்டுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !