உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்து வரும் சோழர் கால கோவில்

சிதிலமடைந்து வரும் சோழர் கால கோவில்

கரூர்: குளித்தலை அருகே, மேட்டு மருதூரில் பழங்கால ஆரா அமுதீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது, போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. கோவில் மூலம் போதிய வருமானம் இல்லாமல் இருப்பதால், அறநிலை துறையினர் கண்டுகொள்வதில்லை. வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள் மெல்ல, மெல்ல சிதைந்து வருகிறது. சீரமைக்கப்படாவிட்டால், சில ஆண்டுகளில் முற்றிலும் சிதைந்து போகும். எனவே, மீண்டும் புதுப்பொலிவு பெற்று கும்பாபிஷேகம் காணவேண்டும் என்பதே சிவபக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !