உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் தீ மிதிப்பு!

காளியம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் தீ மிதிப்பு!

இடைப்பாடி: இடைப்பாடி தாவாந்தெரு மற்றும் வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில்களில் நடந்த, குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். இடைப்பாடி தாவாந்தெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. நேற்று காலை, நடந்த குண்டம் திருவிழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இதே போல், வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் திருவிழாவில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !