உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி சித்திரை பத்தாம் நாள் திருவிழா

மதுரை மீனாட்சி சித்திரை பத்தாம் நாள் திருவிழா

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு  சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வருகின்றனர்.


மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதர் சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு வந்தனர்.  மங்கல தீபங்கள் ஏந்திய சுமங்கலிகள் தேவர்களை வரவேற்றனர். மணமகளின் பெற்றோர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை இருவரும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை ஏற்று அருள்புரிய  வேண்டும்” என வேண்டினர்.


பிரம்மா தலைமையில்  யாக வேள்வி நடந்தது. லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர்.


இன்று மணக்கோலம் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !