சர்வசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3713 days ago
கரூர்: கரூர் மேலப்பாளையம் கிராமம், வடக்குபாளையத்தில் சர்வசித்தி விநாயகர், கருப்பண்ணசாமி, பகவதியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் இன்று நடக்கிறது. கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து, புலியூர் காளியம்மன் கோவிலில் வைக்கப்படுகிறது. அதன் பின், குதிரை, யானை, தேவராட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலுக்கு தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அதன் பின், வேதமத்திரங்கள் முழங்க இன்று காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்கின்றனர்.