உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா; இன்று தேரோட்டம்

மாரியம்மன் கோவில் திருவிழா; இன்று தேரோட்டம்

பொள்ளாச்சி: மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 9ம் தேதி திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று அதிகாலை 6:00 மணிக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி, காலை 10:00மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தேவஸ்தானம் சார்பில், அம்மனுக்கு சீர் வரிசைகளும் வழங்கப்படும். பின், இரவு 7:00 மணிக்கு 12 அடி உயரமுள்ள மரத்தேரில், விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவில், முதல் நாளான இன்று கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; நாளை(3ம்தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர்நிலை நிறுத்தப்படும். பின், இறுதி நாளான 4ம் தேதி மூன்றாம் நாள் தேர்நிலைக்கு வந்து சேருதல், பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 5ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9:00மணிக்கு கம்பம் எடுத்தல்; 7ம் தேதி இரவு 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !