உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் சுமக்க காளைக்கு பயிற்சி

சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் சுமக்க காளைக்கு பயிற்சி

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, தினமும் அடிவாரத்தில் இருந்து, பொதிகாளை மூலம், 1,320 படிகள் வழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதை வைத்தே மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. இதற்காக தற்போது, 3 பொதி காளைகள் பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து படி வழி செல்வதால் குறைந்த ஆண்டிலேயே பலத்தை இழக்கின்றன. மூன்று காளைகளிலும் மாறி, மாறி தினமும் தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. தீர்த்தம் கொண்டு செல்ல பழக்குவதற்காக கோசாலை உள்ளது. இதில் தற்போது, 33 மாடுகள் உள்ளன. இதில் ஒரு காளை தீர்த்தம் சுமந்து செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !