52 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் மக்களை எழுப்பும் 75 வயது இளைஞர்!
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 75 வயது அல்லாபிசை தொடர்ந்து 52 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் தெரு,தெருவாக நள்ளிரவில் தப்ஸ் அடித்துக் கொண்டு தூங்கும் முஸ்லிம்களை நோன்பு நோற்பதற்காக எழுப்பி வருகிறார்.ரமலான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நோன்பு நோற்க உணவுகளை தயார் செய்ய வேண்டும். இந்த நேரங்களில் "பக்கீர் எனப்படும் "தப்ஸ் அடிப்பவர்கள் தெரு, தெருவாக தப்ஸ் அடித்து மக்களை எழுப்பி விடுவர். இந்த வழக்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான கிராமங்களில் இருந்தது. அதன் பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக இந்த தொழிலை விரும்பாமல் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது கிராமங்களில் சங்கு ஒலித்து மக்களை விழிப்படைய செய்கின்றனர். இருப்பினும் கீழக்கரையில், கடந்த 52 ஆண்டுகளாக தப்ஸ் அடிக்கும் பணியை 75 வயது "இளைஞர் அல்லாபிச்சை செய்து வருகிறார்.இவர் கூறியதாவது: கீழக்கரையில் 20க்கும் அதிகமான பக்கீர்கள் இருந்தனர். இதில் மன நிறைவு ஏற்பட்டுள்ளதால் நான் மட்டுமே இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறேன், என்றார்.