நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா: பூ பல்லக்குடன் நிறைவடைந்தது!
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்., 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் கோயில் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வந்தார். கடந்த பிப்., 29 இரவு முதல் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்கள் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நடந்தது. வழுக்கு மரத்தில் ஏராளமான இளைஞர்கள் ஏறினர். பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதன்பின் கோயில் முன் ஊன்றப்பட்டிருந்த வழுக்கு மரம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. நேற்று முன்தினம் பகலில் மஞ்சள் நீராட்டு நடந்தது. இரவு "பூ பல்லக்கில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து கோயிலை அடைந்தார். இத்துடன் விழா நிறைவடைந்தது.