உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரனுார்சத்திரம் கோவிலில் 8ம் தேதி தீமிதி திருவிழா!

பரனுார்சத்திரம் கோவிலில் 8ம் தேதி தீமிதி திருவிழா!

திருக்கோவிலுார்: பரனுார்சத்திரம் திரவுபதியம்மன் கோவில்  தீமிதி விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலுார் அடுத்த பரனுார்சத்திரம் திரவுபதியம்மன் கோவில் தேர், தீமிதி விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 18 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடந்தது. முதல்நாள் நிகழ்ச்சி, கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக 6ம் தேதி திரவுபதி, அர்சுணன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு பரனுார் குளக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கரகம் புறப்பாடாகி கோவிலை வந்தடைகிறது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரவுபதிஅம்மன் சமேத அர்சுணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 7 கிராமங்களில் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 8ம் தேதி மாலை சுவாமி கோவிலை அடைந்தவுடன், தேரோட்டம், தீமிதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !