பார்வதீஸ்வர கோவில் சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
காரைக்கால்: காரைக்கால் பார்வதீஸ்வர கோவில் நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காரைக்கால் கோவில்பத்து திருத்தெளிச்சேரி சுயம்வர தபஸ்வினி உடனமர் பார்வதீஸ்வர கோவிலில் நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் மற்றும் ஸ்ரீ துர்கா மன்றம் இணைந்து நடந்தும் மகாலெட்சுமி பூஜை மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுயம்வர தபஸ்வினி உடனமர் பார்வதீஸ்வர சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது.பின் மகாலெட்சுமிக்கு சகல செல்வங்களும்,சுமங்கலிகள்,கன்னிப்பெண்கள் பங்குகொண்டு நற்பயன் பெற்று சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிளக்குபூஜைகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பார்வதீஸ்வர கோவில் தலைவர் காந்திராஜன்,துணைத்தலைவர் ஆனந்தன்,செயலாள் நடேசன்,பொருளாளர் செந்தில்குமார்,உறுப்பினர் காளிமுத்து உள்ளிட்ட பலர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டுடனார்.