உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரேஸ்வரர் கோவிலில் லட்ச தீப வழிபாடு

சிதம்பரேஸ்வரர் கோவிலில் லட்ச தீப வழிபாடு

தலைவாசல்: தலைவாசல் அருகே, சிவன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு லட்சம் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி ஊராட்சியில் அமைந்துள்ளது சிதம்பரேஸ்வரர் கோவில். மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மாலை, 6 மணியளவில் சிவனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இரவு, 8 மணிக்கு கோவிலின் மேற்பகுதியில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றத் தொடங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரும் ஏராளமான, அளவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !