லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன யாகம்
ADDED :3546 days ago
திருவண்ணாமலை: ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுதர்சன யாகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள மலை மீது, பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் நடந்தது. மேலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகமும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடந்தது. பக்தர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டி, சுதர்சன யாகம் நடத்தப்பட்டது.