சூரிய கிரகணம்: பரிகார பூஜை யாருக்கு?
ADDED :3507 days ago
மன்மத ஆண்டின் ஒரே சூரிய கிரகணம் நாளை (மார்ச் 9) வருகிறது. சூரிய பகவான் பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்கிறார். சூரிய உதயத்திற்கு முன்பே ஏற்படும் இந்த கிரகணம் காலை 6.44 மணி வரை மட்டுமே நீடிக்கிறது. நாளைய சூரிய உதய நேரம் காலை 6.30 மணி. 14 நிமிடங்கள் மட்டுமே கிரகணத்தைக் காண முடியும். கிரகணத்தை ஒட்டி புதன்கிழமைகளில் பிறந்தவர்களும், புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரலாம். கிரகணம் முடிந்த பின் அனைவரும் நீராடி காலை 7 மணிக்கு மேல் சூரிய தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.