செம்மங்குடி கோவிலில் மகா சிவராத்திரி விழா!
ADDED :3507 days ago
திருவாரூர்: குடவாசல் அருகே செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரிவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்,குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்.இக்கோவில் ஸ்ரீ மஹாமேரு ஸ்தலம் ஆகும். சிவராத்திரிவிழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சண்டிகேஸ்வரர் பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை அர்ச்சகரும் ஸ்ரீவித்யா உபாசகருமான ஹரிஹரசிவம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.