உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேக விழா

திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேக விழா

கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து அனுக்ஞை பூஜை, விநாயகர் பூஜை, கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாகுதி ஆகியன நடக்கிறது.அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், விமான அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மாலை திருக்குமரன் மயில் வாகனத்தில் திருமலையில் வீதியுலா வருகிறார். வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சமேதா, கோயில் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !