உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலையில் சிவராத்திரி விழா கோலாகலம்!

திருமூர்த்திமலையில் சிவராத்திரி விழா கோலாகலம்!

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்கள் சன்னதிகளில், மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று மாலை முதல், அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடந்தன. உடுமலை அருகே பூலாங்கிணர் கிருஷ்ணாபுரத்தில் இருந்து, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு,  நேற்று திருச்சப்பரம் கொண்டு வரப்பட்டு, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சி, பக்தி மெல்லிசை நிகழ்ச்சிகள் நடந்தன. தங்கம்மாள் ஓடை, வாணியர் வீதியில் உள்ள அனந்தகோபாலபெருமாள் சுவாமி, மதுரை வீரசுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பூளவாடி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று கணபதி ேஹாமம், அம்மன் அழைப்பும், அபிேஷக ஆராதனையும், விசேஷ அலங்கார பூஜையும் நடந்தது. கொங்கல் நகரத்தில் உள்ள கானியப்ப மசராயர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை உற்சவ மூர்த்திகள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளி, கிருஷ்ணர் கோவிலில் இருந்து, கானியப்ப மசராயர் கோவிலுக்கு வீதியுலா வந்தனர்.

கொடிங்கியம் மகாலட்சுமி அம்மன் கோவில், தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில், ஏரிப்பாளையத்தில் உள்ள, சித்தாண்டீஸ்வரர் கோவில் மற்றும் ருத்ரப்பா நகரில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், எலையமுத்துார் ரோடு புவனகணபதி கோவில், முத்தையாபிள்ளை லே -அவுட் சக்தி விநாயகர் கோவில், குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில்களில் உள்ள சிவன் சன்னதிகளில், நான்குகால யாம பூஜை நடந்தது.

மடத்துக்குளம், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியையொட்டி, நான்கு கால ஜாம பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.  மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில்களில், சிறப்பு ேஹாமங்கள் நடந்தன.  மறையூர், கோவில்கடவில் உள்ள தென்காசிநாதன் கோவிலில், சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை முதல் அதிகாலை வரை, சிறப்பு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !