திருவண்ணாமலையில் வினோத கிரிவலம்
ADDED :3507 days ago
வேலுார்: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவது சிறப்புக்குரியது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன், 54. மகா சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி அதிகாலை, 3:00 மணியளவில், அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரில் இருந்து கிரிவலம் துவங்கினார். அடிக்கொரு முறை விழுந்து வணங்கிய படி கிரிவலம் வந்து, 8ம் தேதி, மாலை, 6:00 மணியளவில், குபேரலிங்கம் அருகே, 10 கி.மீ., துாரம் கிரிவலப் பாதையை, முடித்திருக்கிறார். தொடர்ந்து, நேற்று அதிகாலையில் இருந்து மீண்டும் கிரிவலத்தை துவங்கி நள்ளிரவில் நிறைவு செய்தார்.