வாகனங்களுக்கும் திருவமுது!
ADDED :5242 days ago
திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் திருக்கோயில் மட்டுமே ஸ்ரீபெருமாளுக்குத் திருவமுது செய்வதுடன், அவரது வாகனங்களுக்கும் திருவமுது செய்விக்கிறார்கள். உற்சவ நாட்களில் யானை வாகனத்துக்கு முழுக் கரும்பு. வாழைத் தார் போன்றவற்றையும் குதிரை வாகனத்துக்கு சர்க்கரை பொங்கலையும் திருவமுது செய்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்தக் கோயிலிலும் இதுபோன்று வாகனங்களுக்கு நிவேதனம் செய்வதில்லை.