உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரையில் படுத்து பண்ணாரி அம்மனுக்கு வழிபாடு

தரையில் படுத்து பண்ணாரி அம்மனுக்கு வழிபாடு

சத்தியமங்கலம்: குண்டம் விழாவை முன்னிட்டு, சத்தி பண்ணாரி மாரியம்மன் உற்சவர், கிராமங்களுக்கு சப்பரத்தில் உலா சென்று வருகிறது. நேற்று முன்தினம் சிக்கரம்பாளையத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அன்றிரவு புதூரில் சுவாமி தங்கியது. நேற்று காலை புதூர் பகுதியில் வீதி உலா முடிந்த பிறகு, வெள்ளியம்பாளையம் சென்றது. அப்போது புதூர் மக்கள் தரையில் படுத்து அம்மனை வழிபட்டு, வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !