அரசு பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை!
ADDED :3495 days ago
அன்னுார்: கெம்ப நாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும்,15ம் தேதி துவங்குகிறது. இதையடுத்து மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற, பெற்÷ றாருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், தேர்வு எழுத உள்ள, 50 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரின் கால்களை கழுவி, பொட்டு வைத்து பூஜை செய்தனர். பெற்றோர் தங்கள் மகன், மகள்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊராட்சி தலைவர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் நேரு உட்பட பலர் பங்கேற்றனர்.