உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை பட்டினி விரதம் துவக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை பட்டினி விரதம் துவக்கம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா  நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை, கோவில் நிர்வாகத்தினர், ÷ காவிலுக்காக வழங்கப்பட்ட புதிய யானை மசினி மீது பூக்கூடையை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.  தொடர்ந்து, சுற்றுப்புற கிராம மக்கள், கூடைகளில் பல்வேறு வகையான பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து  வழிபட்டனர்.  உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை வணக்கும் பக்தர்கள் நோய் நொடியின்றி வாழவும், நேற்று துவங்கி, 28 நாட்களுக்கு, சம யபுரம் மாரியம்மன் பச்சை பட்டு உடுத்தி விரதம் மேற்கொள்வார் என்பது ஐதீகம்.அந்த நாட்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்  எதுவும் நடக்காது. இளநீர், துள்ளுமாவு மட்டுமே நெய்வேத்திய பயன்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !