பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்று விழா
ADDED :3602 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு பங்குனி உத்திர கொடியேற்று விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு, காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. இதனைத் தொடர்ந்து, மாலை சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி காப்பு அணிந்தனர்.