உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலங்கம்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா

துலங்கம்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா துலங்கம்பட்டு  அங்காளபரமேஸ்வரி கோவில் மேஹாற்சவம் நடந்தது. விழாவையொட்டி  கடந்த 7ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும், இரவு சுவாமி உற்சவ விழாவும் நடந்தது. மறுநாள் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, 9ம் தேதி  இரவு அன்ன வாகனத்திலும், 10ம் தேதி முத்துப் பல்லக்கிலும், 11ம் தேதி சிம்ம வாகனத்திலும், 12ம் தேதி அன்ன வாகனத்திலும்,  அம்மன் வீதியுலா  நடந்தது.  நேற்று முன்தினம் மயானகொள்ளை திருவிழாவும், இரவு அரசமங்கலம் அருள்வாக்கு அம்மாவுடன் சக்தி கரக ஊர்வலமும் நடந்தது.  ÷ நற்று காலை 10.30 மணிக்கு அம்மன் கஞ்சுனி கபாலத்துடன் அழைத்து கொண்டு ஸ்ரீஅங்காளம்மன் கோவிலை வந்தடைதல் நிகழ்ச்சி நடந்தது. மதி யம் 12.30 மணிக்கு ரதோற்சவ தீபாராதனையுடன் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.  தேரோட்ட நிகழ்ச்சியை, உளுந்துார்பேட்டை  குமரகுரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ஞானமூர்த்தி, ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ஏகாம்பரம், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராமசாமி, கவுன்சிலர் ÷ காவிந்தம்மாள் சக்கரவர்த்தி, ஊராட்சி தலைவர் சந்திராபாலு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !