உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தர நாயகியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தர நாயகியம்மன் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா பிரசித்தி பெற்றது. தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி,அம்பாள் வீதியுலா வந்து மண்டகப்படிதாரர்களின் மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 21 ம்தேதி மாலை மணிக்கு திருக்கல்யாணம், 22 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !