உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள், பத்மாவதி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம்!

பெருமாள், பத்மாவதி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம்!

விருத்தாசலம்: திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாண பிரம்மோற்சவம், விருத்தாசலத்தில் வரும் 26ம் தேதி  நடக்கிறது. இது குறித்து சீனிவாசப் பெருமாள் ஆன்மிக அறக்கட்டளை தலைவர் ராமதாஸ்,  கூறியதாவது: சீனிவாசப் பெருமாள் ஆன்மிக மற்றும்  வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் விருத்தாசலத்தில் வரும் 26ம் தேதி மாலை 4:00 மணியளவில் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண பிரம்÷ மாற்சவம் நடக்கிறது. இதற்காக, திருமலை திருப்பதியிலிருந்து பத்மாவதி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் சுவாமிகள் திருமலை திருப்பதி ÷ தவஸ்தான நிர்வாகம் மூலம் விருத்தாசலம் கொண்டு வரப்படுகிறது. விருத்தாசலம் – சேலம் புறவழிச்சாலை, ராணி மஹால் எதிரில் திருக்கல்யாண  பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெறும் என்றார்.  தொடர்ந்து விழா கமிட்டி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அற ங்காவலர் அகர்சந்த், அறக்கட்டளை துணைத் தலைவர் ஜெயசங்கர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !